வாக்காளர் செய்முறை என்பது‚ ஜனநாயக செய்முறையின் உயர்வான மற்றும் அவசியமான பகுதியாகும். ஆகையால் தேர்தல் என்பதனை ஜனநாயகத்தின் அடையாளமாக ஆலோசிக்க முடியும். முக்கியமாக தேர்தல்கள் நியாயமானதாக இருக்கும் போது அவை ஜனநாயகத்திற்கு முக்கியமானதொன்றாக மட்டுமல்லாமல் மக்கள் சுயேச்சையாக வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு ஆலோசிக்கவும் முடியும். இது சம்பந்தமாக தமது தெரிவு தொடர்பாக முடிவெடுப்பதற்காக பல்வேறுப்பட்ட வழிகளில் தகவல்கள் மக்களுக்கு அவசியப்படுகின்றது.
இலங்கையில் தேர்தல்கள் வரலாறு தேர்தல் உண்மை தன்மையை பாதிக்கும் பல்வேறுப்பட்ட வெட்கப்படகூடிய குறுக்கீடுகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிகழ்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள்‚ தேர்தல் வன்முறை மற்றும் வாக்குரிமையை பயன்படுத்துதலில் கருத்து தெரிவிப்பதற்காக பல்வேறுப்பட்ட சேவைகள் நடைமுறைப்படுத்தப்படினும் தகவல் விஞ்ஞான முன்னேற்றத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தேர்தல் செயல்முறை தொடர்பாக விவரமான தகவல் அமைப்பை இலங்கையில் காணமுடியாதுள்ளது. தேர்தலில் நடைபெறும் பெறும்பாலான மோசடிகளை அறிந்து கொள்வதற்கு தகவல் பகுப்பாய்வு ஊடாக முடியுமானதாக உள்ளதோடு மோசடிகளை கண்டறிதல்‚ கருத்து தெரிவித்தல் மற்றும் மோசடிகளை இல்லாதொழிப்பதற்காக அவதானம் செலுத்த உபயோகமாக உள்ளது. இது மட்டுமல்லாது வாக்காளர் பதிவின் போது இடம்பெறும் குறைகளை வெளிப்படுத்த முடிகின்றது. ஒருவருக்கு கிடைக்ககூடிய தகவல்களில் தரமான தன்மை அவர்களின் அரசியல் செயல்முறைக்கு கலந்துகொள்ளும் திறமை மிகவும் பாதிக்கப்படுவதோடு‚ ஆர்வம் மற்றும் அவதான நிலமையில் இருக்கும் குடிமக்களுக்கும்‚ குடியுரிமையுள்ள வெளியேற்றப்பட்டவர்களுக்கும் மற்றும் அகதிகளுக்கும் இவை அனைத்தும் முக்கியமானவைகளாகும்.
அரசியல் மட்டுமல்லாது பொருளாதாரம்‚ சமூகம் மற்றும் சட்ட கோள அடிப்படையில் இவ்வாறு தேசிய சட்டத்தில் நேரடி விளைவை கொண்டுள்ளதோடு ”தேர்தல்” என்பது பல்வேறு துறைகளில் இருந்து ஆராயும் போது ஒரு முடிவிலா தலைப்பாகும். நல்லாட்சி என்பது காகிதத்திற்கு மட்டுமல்லாது இடம்பெறும் செயல்பாடுகள் தொடர்பாக பொதுமக்கள் வெளிப்படுத்தும் மெளனம் அவர்களை இன்னும் மோசமான வழிகளுக்கு இட்டுச்செல்கின்றது. சமீபத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில்‚ தேர்தல் ஆணையாளர் தேர்களில் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி பொறுப்புக்களோடு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மேலும் அவர்‚ தேர்தல் திணைக்களம் தேர்தல் முடிவுகளை புள்ளிவிபர அடிப்படையில் மேற்கொள்ள கூடாது எனவும் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் கண்பார்வையில் தேர்தல் தரவு ஆழமான பகுப்பாய்வு மேற்கொள்வது அவசியமானதொன்றாகையால்‚ அத்தேவையை பூர்த்தி செய்யும் அடிப்படையில் இலங்கையில் தரவு பகுப்பாய்வை மேற்கொள்ள உத்தேசித்துள்ளோம். மேலும் அது தொடர்பான மக்களுக்கு உதவும் வகையிலும்‚ அது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காகவும் இலங்கை தேர்தல் தரவு பகுப்பாய்வு எனும் பெயரில் இணையத்தளம் செயல்படுகின்றது. (https://slelect.net) இணையத்தளம் வழியாக மும்மொழிகளிலும் எம்மை தொடர்பு கொள்ள முடிவதோடு (https://twitter.com/slelect) டுவிட்டர் தளத்திலும்‚ ((https://www.facebook.com/pages/Sri-Lanka-Election-Analytics/999618176738357?ref=hl) முகநூல் ஊடாகவும்‚ மின்னஞ்சல் வழியாகவும் தொடர்பு கொள்ள முடியும். (http://eepurl.com/buGd_v).
இந்த சேவை தொண்டர்களின் பன்முக கூட்டிணைப்போடு ZL மொஹமட் ஆல் மேற்கொள்ளப்படுகின்றது. எமது தொண்டர்கள் மற்றும் ஆலோசகர்கள் தரவு மேலாண்மை‚ புள்ளியல் பகுப்பாய்வு‚ வெளிக்கள மற்றும் நேரம் தொடர்பான பகுப்பாய்வு‚ புவியியல் காட்சிப்படுத்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப விநியோக இயங்கமைப்புகளில் திறமையானவர்கள். எங்கள் வேலைக்கு இலங்கை தரவு அறிவியல் நிபுணர்களின் ஆதவு கிடைக்கின்றது. ( பெயர் பட்டியல்‚ தலைப்பு பட்டியல் மற்றும் இணைப்புகள் .SLElect.Net இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன). இதேப்போல எமது ஆய்வில் நாம்‚ நேர்மையாகவும் கடுமையாகவும் இருக்கும் பட்சத்தில் எம்மை போன்று எண்ணம் கொண்டவர்கள் எங்களுடன் இணைய வேண்டும் என நம்புகின்றோம். நாம் இந்த வேலையை நிகழும் தேர்தல் மீது உடனடி கண்ணோட்டத்தை செலுத்துவதற்காகவே ஆரம்பித்தோம். பொது நலன் என்ற அடிப்படையில் மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கும் கல்வி செயல்பாடுகளுக்கு உதவுவதோடு ஊக்குவிப்பாக அமையும் எனவும் பொது நன்மைக்காக வேறுப்பட்ட பங்களிப்பை செய்வதற்கும் எதிர்பார்க்கின்றோம்.
எங்களால் மேற்கொள்ளப்படும் சேவையானது பொதுமக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் நல்லாட்சியை உருவாக்குவதற்கு உதவும் எனவும் நம்புகின்றோம். நாங்கள் மொழிபெயர்ப்பாளர்கள்‚ பத்திரிகையாளர்கள்‚ மென்பொருள் வீடியேர ஆசிரியர்கள் மற்றும் சமூக ஊடக கண்காணிப்பு நிபுணர்களிட் இருந்து உள்ளீடுகளை பெற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளோம். (பங்களிப்புகளை slelecta@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும். மேலதிக விபரங்களை எமது இணையத்தளத்தில் காணலாம்). தேர்தலுக்க பின்னும் எமது சேவையை தொடந்தும் மேற்கொள்வதற்கு பங்களிக்க வேண்டும் எனவும் நம்புகின்றேன்.
ZL மொஹமட்